பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னாள் பிரதமர் தேவே கவுடா சந்திப்பு

மாநிலங்களவை எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பிரதமர் மோடியுடன் முன்னாள் பிரதமர் சந்திப்பு
பிரதமர் மோடியுடன் முன்னாள் பிரதமர் சந்திப்பு
Published on

புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால  கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

இதற்கிடையே, கடந்த கூட்டத்தொடரின்போது அவையில் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாக மாநிலங்களவையின் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் பிரதமர் தேவே கவுடா நேற்று சந்தித்துப் பேசினார். பாராளுமன்றத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 

இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பாராளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை சந்தித்தேன். சந்திப்பு சிறப்பானதாக இருந்தது என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com