வேலைக்கு சென்ற வீட்டில் குழந்தைகளை சித்ரவதை செய்த மூதாட்டி- காட்டிக்கொடுத்த கண்காணிப்பு கேமரா

கேரளாவில் வேலைக்கு சென்ற வீட்டில் குழந்தைகளை மூதாட்டி தங்கம்மா கொடுமைப்படுத்தும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகளின் தந்தை மூதாட்டி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
சிறுமி
சிறுமி
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த உடும்பனுர் பகுதியை சேர்ந்தவர் பிபின். இவரது மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 5 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.

மனைவி வெளிநாட்டில் இருப்பதால் குழந்தைகளை கவனித்து கொள்ள பிபின், மூலமட்டம் பகுதியை சேர்ந்த தங்கம்மா (வயது 60) என்பவரை வேலைக்கு அமர்த்தினார்.

தங்கம்மா வேலைக்கு சேர்ந்த பின்னர் பிபின், அடிக்கடி புனித யாத்திரைகளுக்கு சென்று வந்தார். அவர் திரும்பி வந்ததும், குழந்தைகள் இருவரும் அழுது கொண்டிருப்பதை கண்டார்.

சிறு குழந்தைகள் என்பதால் அவர்கள், தங்களுக்கு நடந்ததை, தந்தையிடம் கூற முடியவில்லை. இதையடுத்து பிபின், வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினார்.

அதன்பின்பு, அவர் வெளியூர் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தார். அதில் அவரது குழந்தைகளை மூதாட்டி தங்கம்மா கொடுமைப்படுத்தும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிபின், மூதாட்டி தங்கம்மா மீது போலீசில் புகார் செய்தார். மேலும் அவர் குழந்தைகளை சித்ரவதை செய்யும் கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஒப்படைத்தார்.

இதனை பரிசீலித்த போலீசார் தங்கம்மா மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com