சித்தூர் அருகே நர்சை கற்பழித்து கொன்று தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்

பார்வதி வேலை முடிந்து வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்து பல்வேறு இடங்களில் தேடினர்.இரவு முழுவதும் தேடியும் பார்வதியை கண்டுபிடிக்க முடியவில்லை.
சித்தூர் அருகே நர்சை கற்பழித்து கொன்று தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த வால்மீகிபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (வயது 35). இவர் சித்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்ற பார்வதி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தார் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து பார்வதி குறித்து விசாரித்தனர். அவர்கள் பார்வதி வேலையை முடித்து வீட்டுக்கு கிளம்பி விட்டதாக தெரிவித்தனர்.

பார்வதி வேலை முடிந்து வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இரவு முழுவதும் தேடியும் பார்வதியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை ஊருக்கு வெளியே உள்ள மரத்தில் பார்வதி நிர்வாண நிலையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து பார்வதி குடும்பத்தார் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது பார்வதியின் கால்கள் தரையில் தொட்டபடி பிணமாக கிடந்தார். பார்வதியின் உடலில் ஆங்காங்கே நககீறல்கள் ஏற்பட்டு ரத்த காயம் இருந்தது.

இதனால் அவரை கும்பல் கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பார்வதியை மர்மகும்பல் கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்து மரத்தில் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் என்றனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com