search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தெலுங்கானாவில் வெளிமாநில மது விற்பனையை தடுக்க மதுபானங்கள் விலை அதிரடியாக குறைப்பு

    • மதுபானங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சிறப்பு கலால் வரியை மாநில அரசு குறைத்தது. இதன் காரணமாக மதுபானங்கள் விலையும் குறைந்துள்ளது.
    • குவாட்டர் பாட்டில் ரூ.10 முதல் ரூ.20 வரையிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் 2014-ம் ஆண்டு ரூ.8 ஆயிரம் கோடியாக இருந்த மது விற்பனை தற்போது ரூ.30 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

    சராசரியாக ஒரு மாதத்திற்கு ரூ.2500 கோடி முதல் ரூ.3000 கோடி வரை மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே தெலுங்கானா மாநிலத்தில் அண்டை மாநிலங்களிலிருந்து குறைந்த விலைக்கு கொண்டு வரப்படும் மதுபானங்கள் விற்பனை அதிகரித்தது. இதனால் உள்ளூர் மதுபானங்கள் விற்பனை குறைய தொடங்கியது.

    தெலுங்கானா மது வகைகளின் விற்பனையை அதிகரிக்க அவற்றின் விலையை குறைக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.

    மதுபாட்டில்களின் விலையை குறைக்கும் வகையில் அதன் மீதான செஸ் வரியை குறைக்க வேண்டும் என மதுபானங்களின் ஆலை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து தெலுங்கானா மாநில அரசு மதுபானங்களின் விலையை குறைக்க முடிவு செய்தது.

    மதுபானங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த சிறப்பு கலால் வரியை மாநில அரசு குறைத்தது. இதன் காரணமாக மதுபானங்கள் விலையும் குறைந்துள்ளது.

    குவாட்டர் பாட்டில் ரூ.10 முதல் ரூ.20 வரையிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    நேற்று முதல் மதுபான ஆலைகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மது விலை குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கையிருப்பு உள்ள பழைய மது பாட்டில்களை பழைய விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

    அந்த மதுபானங்கள் காலியான பிறகு குறைக்கப்பட்ட விலையில் மதுபானங்கள் சில நாட்களில் விற்பனை செய்யப்படும்.

    மதுபானங்களில் ஹாட் வகைகள் மட்டுமே விலை குறைக்கப்பட்டுள்ளது. பீர் பாட்டில் விலை குறைக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் மதுபானங்கள் விலை குறைக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்பட வாய்ப்புள்ளது.

    இதனை தடுக்க ஆந்திர மாநில எல்லையான கம்பம், நல்கொண்டா ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×