ஆந்திராவில் ரெயில் நிலையத்தில் 7 மாத குழந்தை கடத்தல்

ஆஞ்சநேயலு தம்பதியினர் தங்களது குழந்தையுடன் தூங்கிக் கொண்டு இருந்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை கடத்திச் சென்றவர்கள் யார் என தேடினர்.
ஆந்திராவில் ரெயில் நிலையத்தில் 7 மாத குழந்தை கடத்தல்
Published on

திருப்பதி:

ஆந்திரா மாநிலம், மந்திராலயம் துங்கபத்ரா பகுதியில் பழைய ரெயில் நிலையம் உள்ளது.

இங்குள்ள கட்டிடத்தில் ஆஞ்சநேயுலு அவரது மனைவி அங்கம்மா தம்பதியினர் தங்கியிருந்தனர். பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து வைத்து வந்தனர். தம்பதிக்கு ராமு என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது.

ஆஞ்சநேயலு தம்பதியினர் தங்களது குழந்தையுடன் தூங்கிக் கொண்டு இருந்தனர். நள்ளிரவில் அப்பகுதிக்கு வந்த 2 மர்ம நபர்கள் குழந்தை ராமுவை கடத்தி சென்று விட்டனர்.

அதிகாலை எழுந்து பார்த்தபோது தங்களுடன் படுத்து இருந்த குழந்தை காணாததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ரெயில்வே போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை கடத்திச் சென்றவர்கள் யார் என தேடினர். ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com