மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதகருக்கு 18 ஆண்டு ஜெயில்

கேரளாவில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதகருக்கு 18 ஆண்டு ஜெயில் தண்டனை அளித்து கொல்லம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
சிறை தண்டனை
சிறை தண்டனை
Published on

திருவனந்தபுரம்:

சென்னையை மையமாக கொண்டு செயல்படும் ஒரு அமைப்பின் பள்ளி, கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ளது. இங்கு தாளாளராக இருந்தவர் போதகர் தாமஸ் பரேக்குளம் (வயது 35). இவர் கடந்த 2017ம் ஆண்டு இங்கு தங்கியிருந்த 16 வயதான மாணவர்கள் 4 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக கொட்டாரக்கரை, புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்திய தண்டனை சட்டம் 377 உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் போதகர் தாமஸ் பரேக்குளம் கைது செய்யப்பட்டார். இவர் மீதான விசாரணை கொல்லம் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறினார்.

இதில் 3 வழக்குகளில் போதகர் தாமஸ் பரேக்குளத்துக்கு தலா 5 ஆண்டுகளும், இன்னொரு வழக்கில் 3 ஆண்டுகளும் என மொத்தம் 18 ஆண்டுகள் தண்டனை விதித்தார்.

அதோடு 4 வழக்குகளிலும் தலா ஒரு லட்சம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என மாவட்ட சட்ட சேவை ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com