search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு
    X

    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

    • கத்தார் ஆயுதப்படையினருக்கான பயிற்சி உள்பட பல்வேறு சேவைகளை தனியார் நிறுவனம் அளித்து வருகிறது.
    • 8 இந்தியர்களுக்கும் மரண தண்டனை விதித்து கத்தார் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.

    புதுடெல்லி:

    கத்தார் நாட்டில் உள்ள தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனத்தில் இந்திய கடற்படையில் ஓய்வுபெற்ற கேப்டன்கள் நவ்தேஜ்சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரப் வசிஷ்ட், கமாண்டர்கள், அமித் நாக்பால், பூர்ணேந்து திவாரி, சுகுனாகர் பகலா, சஞ்சீவ் குப்தா மற்றும் மாலுமி ராகேஷ் ஆகிய 8 பேர் பணியாற்றி வந்தனர்.

    கத்தார் ஆயுதப்படையினருக்கான பயிற்சி உள்பட பல்வேறு சேவைகளை இந்த நிறுவனம் அளித்து வருகிறது.

    இந்த நிலையில் இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளான 8 பேரும் இஸ்ரேலுக்கு ஆதரவாக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் 8 இந்தியர்களுக்கும் மரண தண்டனை விதித்து கத்தார் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்தார்.

    இது தொடர்பாக சமூக வலைதளமான தனது எக்ஸ் பதிவில் அவர் கூறி இருப்பதாவது:-

    கத்தாரில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை இன்று காலை சந்தித்தேன். இந்த வழக்குக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக அவர்களிடம் தெரிவித்தேன். அவர்களது கவலைகள் மற்றும் வலிகளை முழுமையாக பகிர்ந்து கொள்கிறோம்.

    அவர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டது.

    இவ்வாறு மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

    Next Story
    ×