திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு வெந்நீர் வசதி

திருப்பதியில் நேற்று 73,023 பேர் தரிசனம் செய்தனர். நேரடி இலவச தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
முடி காணிக்கை
Published on

திருப்பதி:

திருப்பதி கோவில் வளாகத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் ஆய்வு செய்தார்.

அப்போது பக்தர்கள் குளிக்கும் அறைகளில் குழாய்கள் உடைந்து காணப்பட்டது. மேலும் மொட்டை அடிக்கும் இடம் சுத்தம் செய்யாமல் இருப்பதை கண்டார்.

இது குறித்து கல்யாண கட்டாவில் உள்ள அதிகாரியிடம் மொட்டை அடிக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உடைந்த குழாய்களை விரைந்து சீரமைக்க வேண்டும்.

பக்தர்களுக்கு தேவையான அளவு வெந்நீர் வழங்குவதற்காக பழுதடைந்த எந்திரங்களை மாற்றி விட்டு புதியதாக பொருத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திருப்பதியில் நேற்று 73,023 பேர் தரிசனம் செய்தனர். 26,942 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.98 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

நேரடி இலவச தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com