search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜி20 மாநாடு: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
    X

    ஜி20 மாநாடு: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

    • ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதே ஜி20 உச்சி மாநாட்டின் கோட்பாடு ஆகும்.
    • உண்மையில் மிகப் பெரிய விஷயம். நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஜி20 நாடுகளின் 18-வது உச்சி மாநாடு தலைநகர் புது டெல்லியில் நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய ஜி20 உச்சி மாநாடு நாளை முடிவடைகிறது. மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்துள்ள சர்வதேச தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று உரையாற்றினார். பிறகு, ஜி20 உச்சி மாநாட்டின் நோக்கங்கள், திட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

    இதன் தொடர்ச்சியாக ஜி20 உச்சி மாநாட்டில் பல்வேறு உலக தலைவர்கள் உரையாற்றினர். மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த வகையில், ஜி20 மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது..,

    "இது உண்மையில் மிகப் பெரிய விஷயம். நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதே ஜி20 உச்சி மாநாட்டின் கோட்பாடு ஆகும். பல்வேறு விதங்களில், இந்த குறிக்கோள் குறித்து தான் இந்த மாநாட்டில் நாம் பேசி வருகிறோம்."

    "நிலையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவது, தரமான உள்கட்டமைப்பு முதலீடுகளை மேற்கொள்வது மற்றும் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவதே இதன் இலக்கு. கடந்த ஆண்டு நாங்கள் இந்த இலக்கை அடைய ஒன்று கூடினோம். இன்று மதியம், அமெரிக்கா மற்றும் எங்களின் கூட்டணி நாடுகள் இதனை சாத்தியப்படுத்துவதற்கு மேற்கொண்ட பணிகளை விவரிக்க விரும்புகிறேன்."

    "பொருளாதார கட்டமைப்பு. இந்த வாக்கியத்தை அடுத்த பத்து ஆண்டுகளில், பலமுறை கேட்க போகின்றீர்கள். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் நாடுகள் இடையே உள்ள உள்கட்டமைப்பு இடைவெளி குறித்த பிரச்சினைகளை விவாதித்து வரும் நிலையில், நமது முதலீடுகளின் பலன்களை அதிகப்படுத்த வேண்டும். இதற்காகவே சில மாதங்களுக்கு முன் பொருளாதார கட்டமைப்பு விவகாரத்தில் அமெரிக்கா தனது கூட்டு நாடுகளுடன் பணியாற்றி தொடர்ந்து முதலீடுகளை செய்யும் என்று அறிவித்தது," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×