திருப்பதி மலைப்பாதையில் யானை நடமாட்டம்

6 யானைகள் ஒரு குட்டியுடன் நடமாடுவதை பார்த்து பஸ்கள், பைக்குகள், கார்களில் சென்று கொண்டிருந்த பக்தர்கள் அதனை வீடியோ பதிவு செய்தனர்.2 மாதங்களுக்கு முன் அதே பகுதியில் 2 முறை காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி மலைப்பாதையில் யானை நடமாட்டம்
Published on

திருமலை:

திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் நேற்று யானை கூட்டம் வந்தது.

6 யானைகள் ஒரு குட்டியுடன் நடமாடுவதை பார்த்து பஸ்கள், பைக்குகள், கார்களில் சென்று கொண்டிருந்த பக்தர்கள் அதனை வீடியோ பதிவு செய்தனர்.

காட்டு யானைகளின் நடமாட்டம் பற்றி தகவல் அறிந்த தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர், வனத்துறையினர் ஆகியோர் விரைந்து வந்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் யானை கூட்டத்தை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அந்த வழியாக பைக்கில் செல்லும் பக்தர்கள், உள்ளூர் மக்கள் ஆகியோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

2 மாதங்களுக்கு முன் அதே பகுதியில் 2 முறை காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com