திருப்பதியில் 8 மணி நேரத்தில் தரிசனம்

திருப்பதியில் நேற்று 71,939 பேர் தரிசனம் செய்தனர்.ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவில்
Published on

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஒரு வாரமாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் நாராயணகிரி தோட்டம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நீண்ட தூரம் பக்தர்கள் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் பக்தர்களின் கூட்டம் படிப்படியாக குறைந்தது. பக்தர்களின் கூட்டம் குறைந்ததால் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்திலும், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

திருப்பதியில் நேற்று 71,939 பேர் தரிசனம் செய்தனர். 26,327 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.90 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

X

Maalai Malar
www.maalaimalar.com