என் மலர்

  இந்தியா

  உடல்நிலை பாதித்ததால் சூனியம் வைத்ததாக கருதி கணவன், மனைவி அடித்து கொலை
  X

  உடல்நிலை பாதித்ததால் சூனியம் வைத்ததாக கருதி கணவன், மனைவி அடித்து கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • லட்சுமைய்யா அவரது மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர்.
  • நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் கணவன் மனைவி இருவரையும் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.

  திருப்பதி:

  ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், கல்லேரு ஸ்டார் போர்ட் பேட்டையை சேர்ந்தவர் லட்சுமைய்யா (வயது 54). விவசாயி. இவரது மனைவி சிங்கம்மா (52). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பத்தரய்யா. லட்சுமைய்யா குடும்பத்திற்கும், பத்தரய்யா குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

  இந்த நிலையில் பத்தரையாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. லட்சுமைய்யா குடும்பத்தினர் தனக்கு சூனியம் வைத்ததால்தான் உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக பத்தரய்யா கருதினார். இதனால் 2 குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு மேலும் பகை உண்டானது.

  லட்சுமைய்யா அவரது மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் கணவன் மனைவி இருவரையும் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.

  இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

  இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாதகிரி சம்பவ இடத்திற்கு வந்து கணவன் மனைவி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

  பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பத்தரய்யா, அவரது நண்பர் கண்ணைய்யா இருவரும் தலைமறைவாக உள்ளது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

  சூனியம் வைத்ததாக கருதி கணவன்-மனைவி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×