மேற்கு வங்காள ஆளுநரை நீக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்டு

ஆளுநரால் சட்டசபை கலைக்கப்படும் என்ற அச்சம் நிலவி வந்த நிலையில், பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என முதல் மந்திரிக்கு ஜகதீப் தன்கர் கடிதம் எழுதியுள்ளார்.
ஆளுநர் ஜக்தீப் தங்கர், முதல் மந்திரி மம்தா பானர்ஜி
ஆளுநர் ஜக்தீப் தங்கர், முதல் மந்திரி மம்தா பானர்ஜி
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கும், முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கிடையில், மேற்கு வங்காள ஆளுநர் பதவியில் இருந்து ஜக்தீப் தங்கரை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

வழக்கறிஞர் ராமபிரசாத் சர்கார் தாக்கல் செய்த ரிட் மனுவில், ஆளுநர் ஜக்தீப் தங்கள் மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுகிறார். அவர் பா.ஜ.க.வின் குரலாக பேசி வருகிறார். இதனால் ஜக்தீப் தங்கரை மேற்குவங்காள ஆளுநர் பதவியில் இருந்து நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 

இந்நிலையில், இந்த ரிட் மனுவை நேற்று விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்டு, மேற்கு வங்காள ஆளுநர் ஜக்தீப் தங்கரை நீக்கக் கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com