பீகாரில் பாய்லர் வெடித்து 7 பேர் பலி - பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

பாய்லர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பாய்லர் வெடி விபத்து
பாய்லர் வெடி விபத்து
Published on

பாட்னா:

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த தொழிற்சாலையில் இன்று காலை அங்குள்ள பாய்லர் ஒன்றில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 11 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாய்லர் வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், முசாபர்பூர் பாய்லர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோரின் மருத்துவ உதவிக்காக தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com