நாய்குட்டிக்கு ரூ.7 லட்சம் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாட்டம் - உரிமையாளர் மீது வழக்கு

செல்ல நாய் குட்டி பிறந்தநாளை இரவு 11 மணி வரை கொண்டாடியதற்கு உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
நாய்குட்டிக்கு ரூ.7 லட்சம் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாட்டம்
நாய்குட்டிக்கு ரூ.7 லட்சம் செலவு செய்து பிறந்தநாள் கொண்டாட்டம்
Published on

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் கிருஷ்ணா நகர் மாவட்டத்தில் உள்ள திரண்பார்க் பகுதியை சேர்ந்தவர் சிரக் படேல், ஊர்விஸ் படேல்.

அண்ணன், தம்பிகளான இவர்கள் இருவரும் செல்லமாக நாய் குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் அந்த செல்ல நாய்குட்டிக்கு பிறந்தநாளாம். இதையொட்டி கிருஷ்ணா நகரில் மிகவும் பிரமாண்டமான பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. உறவினர்கள் அனைவருக்கும் அவர்கள் அழைப்பிதழ் அனுப்பி இருந்தனர். நுற்றுக்கணக்கானவர்கள் அந்த செல்ல நாய்க்குட்டி பிறந்த நாளுக்கு திரண்டு வந்தனர்.

நாய் குட்டியை கையில் வைத்துக்கொண்டு சகோதரர்கள் இருவரும் கேக் வெட்டினார்கள். முதல் துண்டு கேக் அந்த நாய்குட்டிக்கு ஊட்டப்பட்டது. அபி என்று செல்லமாக அழைக்கப்படும் அந்த நாய்க்குட்டிக்கு பட்டுத்துணியில் உடைகள் தைத்து போடப்பட்டு இருந்தன. முடி வெட்டி அலங்காரம் செய்யப்பட்டு இருந்த அந்த நாய்க்குட்டி அனைவரையும் கவர்ந்தது. அந்த நாய்குட்டியின் பிறந்தநாளுக்காக சகோதரர்கள் இருவரும் ரூ.7 லட்சம் வரை செலவு செய்து பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தியதாக தெரியவந்தது.

இதற்கிடையே சகோதரர்கள் இருவரும் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறயதாக புகார்கள் எழுந்தன. இதையடுது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

நாய் குட்டி பிறந்தநாளை இரவு 11 மணி வரை சகோதரர்கள் கொண்டாடியது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com