திருநங்கையை 5 ஆண்டு காதலித்து திருமணம் செய்த ஆட்டோ டிரைவர்

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோவில் வரும்போது பிங்கியுடன் ஸ்ரீநிவாசுக்கு பழக்கம் ஏற்பட்டது.இருவரும் நட்புடன் பழகி வந்தனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
ஸ்ரீநிவாஸ்- பிங்கி திருமணம்
ஸ்ரீநிவாஸ்- பிங்கி திருமணம்
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் நர்சம்பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் (வயது 22). பட்டப் படிப்பு படித்த இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பிங்கி திருநங்கை.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோவில் வரும்போது பிங்கியுடன் ஸ்ரீநிவாசுக்கு பழக்கம் ஏற்பட்டது.

அடிக்கடி அவர்கள் சந்திக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது.

இதனால் இருவரும் நட்புடன் பழகி வந்தனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

ஒருவரை ஒருவர் பார்க்க முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.

இதனால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் வேமுலவாடா கோவிலுக்கு சென்றனர். அங்கு வைத்து இருவரும் சாமி சன்னதியில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரீநிவாஸ் பிங்கி கழுத்தில் தாலி கட்டி அவரை மனைவியாக ஏற்றுக் கொண்டார்.

ஆட்டோ டிரைவர் திருநங்கையை காதலித்து திருமணம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com