ஆலப்புழாவில் மது வாங்க பெற்றோர் பணம் தராததால் வீட்டுக்கு தீ வைத்த வாலிபர் கைது

வாலிபர் வீட்டுக்கு தீவைத்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.சுதீஷ் பதுங்கியிருப்பதை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தனிப்படையினர் கண்டுபிடித்தனர்.
ஆலப்புழாவில் மது வாங்க பெற்றோர் பணம் தராததால் வீட்டுக்கு தீ வைத்த வாலிபர் கைது
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காவலம் பஞ்சாயத்துக்குட்பட்ட வேலிவாக்கல் பகுதியை சேர்ந்தவர் சுதீஷ்(வயது24). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துவந்த அவர் பெற்றோரிடம் பணம் வாங்கி மதுகுடித்த படி இருந்துள்ளார்.

சம்பவத்தன்றும் மது குடிக்க பெற்றோரிடம் பணம் கேட்டிருக்கிறார். அவருக்கு பணம் கொடுக்க பெற்றோர் மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் சுதீஷ், பெற்றோருடன் தகராறு செய்திருக்கிறார். மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் கோடரியால் வெட்டி உடைத்து சேதப்படுத்தினார்.

பின்பு பெற்றோரை வீட்டைவிட்டு வெளியேறச் செய்துவிட்டு, பெட்ரோல் ஊற்றி வீட்டுக்கு தீவைத்தார். இதனைப்பார்தது அதிர்ச்சியடைந்த வாலிபரின் பெற்றோர் அலறினர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

வெகுநேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் அவர்களது வீட்டின் ஒரு பகுதி முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமானது. வாலிபர் வீட்டுக்கு தீவைத்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் புளியங்குன்றம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் வீட்டுக்கு தீவைத்த வாலிபர் சுதீஷ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் நிசாம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் ஆலப்புழா பகுதியில் சுதீஷ் பதுங்கியிருப்பதை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தனிப்படையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கு செ்ன்று சுதீஷை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com