சினிமா பார்த்து விட்டு வந்த தம்பதி திடீரென ஆற்றில் குதித்தனர்

சினிமா முடிந்து தியேட்டரில் இருந்து பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து சிவராம கிருஷ்ணனை கைது செய்தனர்.
சினிமா பார்த்து விட்டு வந்த தம்பதி திடீரென ஆற்றில் குதித்தனர்
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம், பெனுகொண்டா மாவட்டம், மோர்தாவை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவரது மனைவி சத்தியவாணி. தம்பதிக்கு கடந்த வாரம் திருமணம் நடந்தது.

திருமணம் நடந்த 3-வது நாளிலேயே கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுமண தம்பதி இருவரும் இரவு காட்சி சினிமா பார்க்க சென்றனர். சினிமா முடிந்து தியேட்டரில் இருந்து பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விரக்திஅடைந்த இருவரும் தற்கொலை செய்வதற்காக கோதாவரி ஆற்றில் குதித்தனர்.

இதனை கண்டு ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் திடுக்கிட்டனர். அவர்கள் சிவராம கிருஷ்ணனை காப்பாற்றினர். ஆனால் அவரது மனைவி சத்தியவாணியை காப்பாற்ற முடியவில்லை. அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

இதுகுறித்து பெனுகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து சிவராம கிருஷ்ணனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com