search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் டேங்கர் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 7 பேர் உயிரிழப்பு
    X

    ஆந்திராவில் டேங்கர் சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 7 பேர் உயிரிழப்பு

    • டேங்கரில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு தொழிலாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • எண்ணெய் ஆலை உரிமையாளர் அம்பாண்டி சுப்பண்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் பெத்தபுரம் மண்டலம் ஜி ராகம்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலை கடந்த ஆண்டு புதியதாக தொடங்கப்பட்டது.

    இங்கு அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள படேரு மற்றும் புலிமேரு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா, நரசிம்மா, சாகர், பாஞ்சி பாபு, கர்ரி ராமராவ், கட்டமுரி ஜெகதீஷ் மற்றும் பிரசாத் ஆகிய 7 தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தனர்.

    இவர்கள் இன்று காலை தொழிற்சாலையில் இருந்த தொட்டி ஒன்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொட்டியில் உள்ளே கசடுகளை அகற்ற உள்ளே இறங்கினர்.

    அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் 7 பேரும் மூச்சு திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    எண்ணெய் தொழிற்சாலை, தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. நச்சு வாயு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    பலியான 7 பேர் ஏணியைப் பயன்படுத்தி தொட்டியில் நுழைந்ததும் அவர்கள் அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

    தொட்டியில் ஏறிய பிறகு மூச்சு விட முடியவில்லை என்று உயிர் பிழைத்த ஒருவர் கூறினார்.

    தொழிலாளர்கள் உடல்கள் மீட்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொழிலாளர்களின் உறவினர்கள் திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு காக்கிநாடா எஸ்.பி. ரவிந்தரநாத் பாபு மற்றும் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×