6-ம் வகுப்பு மாணவி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம்

அதிகாலை கடுமையாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தனது பாட்டியிடம் சிறுமி கூறியுள்ளார்.12 வயது சிறுமி மூச்சுத்திணறலில் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
6-ம் வகுப்பு மாணவி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம்
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள அப்பைபாலம் கிராமத்தை சேர்ந்தவர் லகபதி. இவருடைய மனைவி வசந்தி. தம்பதியின் மகள் ஸ்ரவந்தி.

இவர் மரிபெடா தண்டாலில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை வீட்டில் தனது தோழிகளுடன் ஸ்ரவந்தி விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு லேசாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் அதிகாலை கடுமையாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், தனது பாட்டியிடம் கூறியுள்ளார்.

சிறிது நேரத்திலேயே சிறுமி மயங்கி விழுந்தார். உடனே சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தார்.

12 வயது சிறுமி மூச்சுத்திணறலில் பலியானது, அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com