கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி

மின்சாரம் தாக்கி 3 பேர் இறந்ததால் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி
Published on

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம், பர்வத கிரி அடுத்த மோட்யா தாண்டாவில் பிரசித்தி பெற்ற துர்கை அம்மன் கோவில் உள்ளது.

துர்க்கை அம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதாக இருந்தது. இதற்காக கோவில் வளாகம் முழுவதும் அலங்கார மின்விளக்குகள் பொருத்தும் பணி நடந்தது. அதே பகுதியை சேர்ந்த தேவேந்திரன், ரவி, அனில் உள்ளிட்ட 4 பேர் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள் திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளர்கள் 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

தேவேந்திரன் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அங்கிருந்தவர்கள் மற்ற 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாரங்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ரவி மற்றும் அனில் ஆகியோர் இறந்தனர். மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மின்சாரம் தாக்கி 3 பேர் இறந்ததால் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com