search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் 2-வது வந்தே பாரத் ரெயில் சேவை நாளை தொடக்கம்
    X

    கேரளாவில் 2-வது வந்தே பாரத் ரெயில் சேவை நாளை தொடக்கம்

    • திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே இயக்கப்படும் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நாளை தொடங்கி வைக்கிறார்.
    • கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் சந்திப்பு, திருச்சூர், சொரனூர், திரூர், கோழிக்கோடு ஆகிய ரெயில் நிலையங்களில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    வந்தே பாரத் ரெயில் சேவை நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே வந்தே பாரத் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேரில் தொடங்கி வைத்தார். இந்நிலையில் கேரளாவில் 2-வது வந்தே பாரத் சேவை நாளை தொடங்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே இயக்கப்படும் அந்த ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நாளை தொடங்கி வைக்கிறார். ஆலப்புழா வழியாக செல்லும் இந்த ரெயில் திங்கட்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் சந்திப்பு, திருச்சூர், சொரனூர், திரூர், கோழிக்கோடு ஆகிய ரெயில் நிலையங்களில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×