என்னை எதிர்த்து போட்டியிட மோடி தயாரா?

போட்டியிட்டால் அதுவே தனக்கு இறுதி தேர்தலாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.என்னை மாற்றுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது என்று கூறினார்.
என்னை எதிர்த்து போட்டியிட மோடி தயாரா?
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் காங்கிரஸ் தலைவர் சசிதரூர். இவர் தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலநது கொண்டு பேசினார்.

அப்போது அவர் வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் 4-வது முறையாக போட்டியிட தயாராக இருப்பதாவும், இறுதி முடிவை கட்சி தான் எடுக்கும் என்றும், அப்படி போட்டியிட்டால் அதுவே தனக்கு இறுதி தேர்தலாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் திருவனந்தபுரம் தொகுதியில பிரதமர் மோடி போட்டியிட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, என்னை எதிர்த்து மோடி போட்டியிட்டாலும் நானே வெற்றி பெறுவேன். என்னை மாற்றுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com