அசாம் வெள்ளத்தால் 2 லட்சம் பேர் பாதிப்பு

திமாஹசாவோ மாவட்டத்தில் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு ரெயில் பாதைகள் சகதி, பாறைகளுக்கு அடியில் புதைந்தன. இதனால் அந்த மாவட்டம் இதர பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளது.
வெள்ளத்தில் செல்லும் வாகனம்
வெள்ளத்தில் செல்லும் வாகனம்
Published on

கவுகாத்தி:

அசாம் மாநிலத்தில் 20 மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் 1,97,248 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 46 வருவாய் வட்டத்தில் உள்ள 652 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. ஹோஜய், கச்சார் மாவட்டங்களில் பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதிகபட்சமாக ஹோஜய்யில் 78,157 பேரும், கச்சாரில் 51,357 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல இடங்களில் சாலைகள், பாலங்கள், வீடுகள் சேதம் அடைந்துள்ளன. திமாஹசாவோ மாவட்டத்தில் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு ரெயில் பாதைகள் சகதி, பாறைகளுக்கு அடியில் புதைந்தன. இதனால் அந்த மாவட்டம் இதர பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு உள்ளது. அந்த மாவட்டத்தில் தொலைத்தொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டது.

7 மாவட்டங்களில் 55 முகாம்கள் அமைக்கப்பட்டு 32,959 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கச்சார் மாவட்டத்தில் வெள்ளத்தால் 2 பேரும், திமா ஹசாவோவில் நிலச்சரிவால் 3 பேரும் பலியானார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com