search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விவசாய பம்பு செட்டிற்கு துணி துவைக்க சென்ற சிறுமியை தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கும்பல்
    X

    விவசாய பம்பு செட்டிற்கு துணி துவைக்க சென்ற சிறுமியை தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கும்பல்

    • சிறுமியின் பெற்றோர் பணத்தை வாங்க மறுப்பு தெரிவித்ததால் ஆளுங்கட்சியினர் சிறுமியின் பெற்றோரை மிரட்டத் தொடங்கினர்.
    • எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததால் டிஎஸ்பி மாதவ ரெட்டி வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் காட்டேனி கோனா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த 6-ந்தேதி கிராமத்துக்கு வெளியே உள்ள விவசாய பம்பு செட்டில் துணி துவைக்க சென்றார்.

    சிறுமியை பின் தொடர்ந்து சென்ற 5 பேர் கொண்ட கும்பல் அவரை அருகில் உள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டத்திற்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி சென்றனர்.

    துணி துவைக்க சென்ற தனது மகள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை தேடிச் சென்றனர். விவசாய பம்பு செட் அருகே சிறுமி எடுத்துச் சென்ற துணிகள் சிதறி கிடந்தது. ஆனால் அங்கு சிறுமி இல்லை.

    அங்குள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் பார்த்தபோது சிறுமியின் உடைகள் கிழிந்த நிலையில் அலங்கோலமாக மயங்கி கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சிறுமியை உள்ளூரை சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர்களின் மகன்கள் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இது சம்பந்தமாக பஞ்சாயத்தார் கூடி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் தருவதாக பேரம் பேசினர்.

    சிறுமியின் பெற்றோர் பணத்தை வாங்க மறுப்பு தெரிவித்ததால் ஆளுங்கட்சியினர் சிறுமியின் பெற்றோரை மிரட்டத் தொடங்கினர்.

    இது குறித்து அவரது பெற்றோர் காட்ரேனி கோனா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பு தெரிவித்தனர்.

    எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்ததால் டிஎஸ்பி மாதவ ரெட்டி வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஓலேடி தேஜா, ஓலேடி தர்மராஜ், ஓலேடி துளசி, மல்லாடி வம்சி, அர்த்தனி சத்தியம் ஆகிய 5 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×