திருவனந்தபுரம் அருகே பறவை காய்ச்சல் எதிரொலி- 2 ஆயிரம் கோழி, வாத்துகளை அழிக்க முடிவு

பறவை காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் ஜெரோமிக் ஜார்ஜ் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. நோய் பாதிக்கப்பட்ட பண்ணையை சுற்றியுள்ள 9 கிலோ மீட்டர் பகுதியில் கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் அருகே பறவை காய்ச்சல் எதிரொலி- 2 ஆயிரம் கோழி, வாத்துகளை அழிக்க முடிவு
Published on

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் மாவட்டம் அழுர் அருகே பெருமாங்குழி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழி, வாத்து பண்ணைகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான கோழி, வாத்துகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகளும், வாத்துகளும் அடுத்தடுத்து இறந்தன.

அதைத்தொடர்ந்து இவற்றின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக போபாலில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பறவை காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் ஜெரோமிக் ஜார்ஜ் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பறவை காய்ச்சல் பரவிய பண்ணையில் உள்ள கோழிகள், வாத்துகளையும், மேலும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து பறவைகளையும் அழிக்க முடிவு செய்யப்பட்டது.

முதல் கட்டமாக 2 ஆயிரம் பறவைகளை இன்று (திங்கட்கிழமை) அழிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் நோய் பாதிக்கப்பட்ட பண்ணையை சுற்றியுள்ள 9 கிலோ மீட்டர் பகுதியில் கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தவிர வெளிப்பகுதிகளில் இருந்து இங்கு முட்டை, இறைச்சி கொண்டு வரவும், இங்கிருந்து வெளியிடங்களுக்கு கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com