பரபரப்பாக நடந்த திருமணத்தில் ஸ்விக்கி டெலிவரி ஊழியர் செய்த மாஸ் சம்பவம்

திருமண நிகழ்வின்போது அக்னிச் சடங்கிற்காக பயன்படுத்தப்படும் விறகை டெலிவரி செய்த ஊழியர்
பரபரப்பாக நடந்த திருமணத்தில் ஸ்விக்கி டெலிவரி ஊழியர் செய்த மாஸ் சம்பவம்
Published on

தென்னிந்தியாவில் நிகழும் பாரம்பரியமான திருமணங்கள் கடைசி நேரம்வரை பரபரப்பிற்கு பஞ்சமில்லாமலே நடந்து முடியும் வழக்கம் கொண்டவையாக உள்ளது.

இதைப் பிரதிபலிக்கும் வகையில் திருமண நிகழ்வின் போது ஸ்விக்கி டெலிவரி செய்யும் நபர் ஒருவர், திருமணத்தின் இடையில் அவசர அவசரமாக வந்து ஆர்டரை கொடுத்து விட்டு சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

சுப்ரியா மட்டப்பள்ளி என்பவரின் இன்ஸ்டா பதிவில், இந்துக்களின் புனித சடங்காக பார்க்கப்படும் அக்னி குண்டம் பார்க்கப்படுகின்றது.

இதற்கு தேவைப்படும் விறகு போன்ற ஒரு பொருளை டெலிவரி செய்யும் நபர், மண்டபத்தின் வாசலில் நின்ற பெண்ணிடம் பொருளை கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார்.

இதையடுத்து அவசர கதியில் டெலிவரி செய்யப்பட்ட அந்த பொருள், கடைசியாக திருமணத்தை நடத்தி வைக்கும் பூசாரிக்கு சென்றடைந்தவுடன் அங்கிருந்தவர்கள் பெருமூச்சு விடுவதும் பதிவாகியுள்ளது.

பரபரப்பின் உச்சியில் நிகழ்ந்த திருமணம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் இதற்கு கமெண்ட் செய்துள்ள ஸ்விக்கி நிறுவனம், “வேறு என்ன வேண்டுமானாலும், அதை கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com