வேலையில்லா இளைஞர்கள் கரப்பான் பூச்சிகளா?.. சர்ச்சை கருத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்

ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் இதர மதிப்புமிக்க துறைகளுக்குள்ளும் ஊடுருவுகிறார்கள்.
வேலையில்லா இளைஞர்கள் கரப்பான் பூச்சிகளா?.. சர்ச்சை கருத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம்
Published on

வழக்கறிஞர் ஒருவர் சீனியர் அட்வகேட் அந்தஸ்து கேட்டு தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் , " சில வேலையற்ற இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கரப்பான் பூச்சிகளை போலவும், ஓட்டுண்ணிகளை போலவும் உள்ளனர்.

சமூக ஊடக செயல்பாட்டாளர்களாக மாறி அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். இங்கு பலரின் சட்டத்துறை பட்டங்கள் சரிபார்க்கப்பட வேண்டும்" என்று பேசியிருந்தார்.

மனுதாக்கல் செய்திருந்த வழக்கறிஞர் தனக்கு சீனியர் அட்வகேட் அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவிடுவதும், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அழுத்தம் தருவதுமாக இருந்துள்ளார். இதனாலேயே சூர்யகாந்த் அவ்வாறு சாடினார்.

இது பொதுவாக வேலையில்லா இளைஞர்ளை விமர்சிக்கும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் தனது கருத்து குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

நிகழ்வொன்றில் பேசுகையில் அவர் கூறியதாவது, "நான் தெரிவித்த கருத்துக்களை ஊடகங்களின் ஒரு பிரிவினர் தவறாகச் சித்தரித்து வெளியிட்டுள்ளனர் என்பதைப் படித்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

நான் நாட்டின் இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகள் என்று விமர்சித்ததாகக் கூறுவது முற்றிலும் ஆதாரமற்றது.

போலிப் பட்டங்களைப் பயன்படுத்தி வழக்கறிஞர் போன்ற உன்னதமான தொழில்களுக்குள் நுழைபவர்களை மட்டுமே நான் குறிப்பாக விமரிசித்தேன்.

இத்தகைய நபர்கள் தான் பின்னர் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் இதர மதிப்புமிக்க துறைகளுக்குள்ளும் ஊடுருவுகிறார்கள். அதனால்தான் இவர்களை ஒட்டுமொத்த சமூக அமைப்பையும் சுரண்டும் ஒட்டுண்ணிகள் என்று நான் சாடினேன்.

இந்திய இளைஞர்கள் என் மீது அளவற்ற மதிப்பை கொண்டுள்ளேன். நான் அவர்களை என்றும் வளர்ந்த இந்தியாவின் மிக முக்கியத் தூண்களாகவே கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com