தமிழகத்தை சேர்ந்த வி. மோகனா உட்பட ஐவர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 37 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த  வி. மோகனா உட்பட ஐவர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்
Published on

மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா உட்பட 5 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் வரலாற்றிலேயே வழக்கறிஞராக இருந்து நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்படும் 2வது பெண்மணி என்ற பெருமையை வி. மோகனா பெற்றுள்ளார். 2031-ம் ஆண்டு ஜூன் வரை 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.

அவருடன் இன்று நியமிக்கப்பட்ட மற்ற நால்வர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்தவர்கள் ஆவர்.

பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய ஷீல் நாகு, மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய ஸ்ரீ சந்திரசேகர், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் சச்தேவா, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த அருண் பல்லி ஆகியோர் முறையே உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் நியமனம் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 37 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com