பள்ளிக்கு அசைவ உணவை கொண்டு வந்த மாணவர் சஸ்பெண்டு- வீடியோ

மாணவனின் தாயார் பள்ளிக்கு சென்று பள்ளி முதல்வரிடம் விசாரித்தார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கு அசைவ உணவை கொண்டு வந்த மாணவர் சஸ்பெண்டு- வீடியோ
Published on

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 5 வயது மாணவர் ஒருவர் பள்ளிக்கு கொண்டு வந்த டிபனில் அசைவ உணவு இருந்ததாக கூறி அந்த மாணவனை சஸ்பெண்டு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தாயார் பள்ளிக்கு சென்று பள்ளி முதல்வரிடம் இது தொடர்பாக விசாரித்தபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com