

பான் மசாலா மற்றும் குட்கா போன்ற புகையிலை பொருட்களை பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு, தடை விதிக்கும் வரைவு திருத்த மசோதாவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலைகள் விதிமுறைகளில் (2018) மாற்றம் செய்யப்பட்டு, அலுமினியம் ஃபாயில், பாலிஎத்திலீன், பாலியஸ்டர், பாலிபுரோபைலின் போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இயற்கை முறையில் கிடைக்கப்பெறும், காகிதம், காகித அட்டைகள் மற்றும் செல்லுலோஸ் போன்ற பொருட்களை மட்டுமே பேக்கிங்க் செய்ய பயன்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளது.
அட்டவணை நான்கில் உள்ள உணவு பேக்கிங் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு, பேக்கிங் செய்வதற்கு பயன்படும் பொருட்களை அதில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் உணவு பொருட்களை சேமித்து வைக்கவும், பேக் செய்யவும் மற்றும் விற்பனை செய்யவும் பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களுக்கு முழுவதுமாக தடை விதித்துள்ளது.
இதுகுறித்த ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கும்படி, பங்குதரர்களுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு, கேரளா, மஹாரஸ்டிரா, பீகார், ஆந்திரபிரதேஷ், தெலுங்கானா, ஒடிஷா, மேற்குவங்கம், குஜராத் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.