Stock Market | ஈரான் போருக்கு மத்தியில் இன்று உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை!

நேற்று உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை இன்றும் உயர்வுடன் தொடங்கியுள்ளது.
stock market
stock market
Published on: 

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்க போர் இன்று 24வது நாளை எட்டியள்ளது. உலகின் எண்ணெய், எரிவாயு வர்த்தக கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் இந்த போர் உலகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் கடந்த ஒரு மாதமாக மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. கடந்த திங்கள்கிளை மட்டும் சந்தை சரிவால் முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட ரூ.11 லட்சம் கோடியை இழந்தனர்.

இந்நிலையில், நேற்று உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தை இன்றும் உயர்வுடன் தொடங்கியுள்ளது. இன்று சென்செக்ஸ் 1600 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து 75,600 புள்ளிகளுக்கும் மேல் சென்றது. நிஃப்டி சுமார் 500 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து 23,400 புள்ளிகளுக்கும் மேல் சென்றது.

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக டிரம்ப் அறிவிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் கடந்த 2 நாட்களாக பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com