

லக்னோ:
சமாஜ்வாதி கட்சியின் மவு மாவட்டம் கோசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாராசிங் சவுகான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சட்டசபை சபாநாயகர் சதீஷ் மகானா மற்றும் சட்டசபை முதன்மை செயலாளர் பிரதீப் துபே ஆகியோரிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை தாராசிங் சவுகான் அளித்துள்ளார்.
சவுகான் ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மவு மாவட்டம் கோசி சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏவான தாராசிங் ஆகிய நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் சவுகான் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். சட்டசபை தேர்தலுக்கு முன் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் சவுகான் இடம்பெற்றிருந்த நிலையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.