ஆந்திர மாநில நலன் கருதி 11 நாள் விரதம் இருக்கும் பவன் கல்யாண்

வாராஹி தீக்ஷையின் விதிகளை நிறைவேற்றுவது கடினம்.கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பவன் கல்யாண் வாராஹி தேவியை வழிபட்டார்.
ஆந்திர மாநில நலன் கருதி 11 நாள் விரதம் இருக்கும் பவன் கல்யாண்
Published on

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண், சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை தொடர்ந்து, அம்மாநில துணை முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில், அவர் தனது மாநில மக்களின் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நலனுக்காக, நேற்று முதல் தொடங்கி 11 நாட்கள் நீடிக்கும் வாராஹி தீக்ஷை விரதம் மேற்கொள்கிறார்.

இதில் வாராஹி அம்மனை வழிபடும் பவன் கல்யாண் 11 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இந்த வாராஹி தீக்ஷையின் விதிகளை நிறைவேற்றுவது கடினம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பவன் கல்யாண் வாராஹி தேவியை வழிபட்டார். அதனுடன், அவர் வாராஹி விஜய யாத்திரையைத் தொடங்கி தீட்சை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com