

மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரை தேர்வு செய்யப்படுவதற்கான தீர்மானத்தில், இரண்டு எம்.எல்.ஏ.-க்கள் கையெழுத்து போலியாக போடப்பட்டது தெரியவந்தது.
பாஜக தலைவரும், முதல்வருமான சுவேந்து அதிகாரி அந்த இரண்டு எம்.எல்.ஏ.-க்கள் பெயரை வெளியிட்டார். அதன்பின் மம்தா கட்சியில் பிளவு ஏற்பட்டது 60 எம்.எல்.ஏ.-க்கள் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த போலி கையெழுத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி (எம்.பி.) தலைமையில்தான் இந்த கூட்டம் நடைபெற்று கையெழுத்து வாங்கப்பட்டது. இதனால் அபிஷேக் பானர்ஜி பெயரும் வழக்கில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சி.ஐ.டி. தன் மீது கைது போன்ற நடவடிக்கைகள் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அபிஷேக் பானர்ஜி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு வருகிற 10-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.