மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா

மணிப்பூரில் சட்டமன்ற தேர்தலில் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி 35 வேட்பாளர்களை நிறுத்தும் என அம்மாநிலத்தின் சிவசேனா கட்சி தலைவர் எம். டோம்பி சிங் தெரிவித்துள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே
ஏக்நாத் ஷிண்டேஏக்நாத் ஷிண்டே
Published on: 

மணிப்பூரில் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கலாம். நாங்கள் 35-க்கும் அதிகமான வேட்பாளர்களை சட்டமன்ற தேர்தலில் நிறுத்துவோம். நாங்கள் நிலத்தை பாதுகாத்து, வளர்ச்சியை கொண்டு வர விரும்புகிறோம். மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதலில் எந்தவொரு அரசியல் கட்சிகளாலும் தீர்வு காண முடியவில்லை.

உயிர்களை காப்பதற்கும் உடைமைகளை பாதுகாப்பதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில், சிவசேனா போன்ற பிற தரப்பினருக்கு ஆதரவளிக்கப்பட வேண்டும். சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு இலக்க இடங்களை பெற நாங்கள் முயற்சிப்போம். பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்பட்டால், அதிலும் கட்சி போட்டியிட்டு 30-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களை களமிறக்கும் என்றார் எம். டோம்பி சிங்.

60 சட்டமன்ற இடங்களில் 40 இடங்கள் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ளது. மற்ற 20 இடங்கள் மலைப்பகுதிகளில் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com