கோர விபத்தில் சிக்கிய அரசு பேருந்து தீப்பிடித்ததில் 7 பயணிகள் பலி: 40 பேர் காயம்

மகாராஷ்டிரா மாநில அரசுக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்டதில் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோர விபத்தில் சிக்கிய அரசு பேருந்து தீப்பிடித்ததில் 7 பயணிகள் பலி: 40 பேர் காயம்
Published on

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் பர்டோலி நகர் யுவா கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சூரத்தில் இருந்து துலேவுக்கு மகாராஷ்டிர மாநில அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சாலிஸ்கயோனில் இருந்து சூரத்திற்கு மற்றொரு பேருந்து சென்று கொண்டிருந்தது.

இதில் திடீரென ஒரு பேருந்து டிராக்டர் மீது மோதியது. மோதிய வேகத்தில் தடுப்புச் சுவரை தாண்டி மறுபக்கத்தில் வந்து கொண்டிருந்த பேருந்து மீது பயங்கரமாக மோதியது. அத்துடன் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பஸ்ஸில் சிக்கிக் கொண்ட பயணிகளை காயத்துடன் மீட்ட போலீசார், தீயணைப்பு வீரர்கள் அருகில் உள் மருத்துவமனையில் சேர்த்தனர். இரண்டு பேருந்துகளிலும் இருந்த 40 பயணிகள் காயம் அடைந்தனர். உயிரிழ்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு மகாராஷ்டிரா மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com