

மும்பை பங்குச் சந்தை கடந்த வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் குறியீடு எண் சென்செக்ஸ் 77550.25 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தகம் நிறைவடைந்த பிறகு, அமெரிக்கா- ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை உடன்படிக்கை எதுவும் ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையிடப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கட்கிழமை) வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தை மற்றும் இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியுடன் தொடங்கியது.
மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் 75937.16 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. 1612.99 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச் சந்தை தொடங்கியது.
அதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டி வெள்ளிக்கிழமை 24050.60 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. இன்று 23589.60 புள்ளிகள் வர்த்தகம் தொடங்கியது. 462 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் தொடங்கியது. முக்கிய வங்கிகள் பங்குகள் கடும் சரிவை எதிர்கொண்டது.
டிரம்ப் அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதுவும் முக்கிய காரணமாகும்.