

ஆந்திர மாநிலம், ஏலூரு மாவட்டம், கொய்யல கவுடேனியை சேர்ந்தவர் சிவ சீனிவாஸ். நேற்று காலை சிவ சீனிவாஸ் வீட்டில் இருந்த போது நாகப்பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது. உறவினர்கள் அவரை ஜங்கா ரெட்டி குடேம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
சிவ சீனிவாஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இரவு 10 மணி அளவில் சிவ சீனிவாஸை கடித்த அதே நாகப்பாம்பு அவர் சிகிச்சை பெற்று வரும் வார்டு முன்பாக வந்தது. இதனைக் கண்ட ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் சிவ சீனிவாஸ் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அந்த பாம்பை அடித்து கொன்றனர். வாலிபரை கடித்த அதே பாம்பு ஆஸ்பத்திரிக்கு வந்ததால் நோயாளிகள், ஊழியர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.