நீர்வீழ்ச்சியில் செல்ஃபி... தவறி விழுந்து மூன்று பள்ளி மாணவிகள் பலி

நால்வரும், நீர்வீழ்ச்சியின் ஓரத்தில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தபோது, ​​அவர்கள் எதிர்பாராதவிதமாக வழுக்கி தண்ணீரில் விழுந்தனர்.
நீர்வீழ்ச்சியில் செல்ஃபி... தவறி விழுந்து மூன்று பள்ளி மாணவிகள் பலி
Published on

ஆந்திர மாநிலம் அல்லூரி அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் அனந்தகிரி மண்டலத்தில் உள்ள மூலகும்மி அருகே நீர்வீழ்ச்சி ஒன்று அமைந்துள்ளது.

ஹுக்கும்பேட் மண்டலம், ஜும்புவலசா கிராமத்தைச் சேர்ந்த திரிஷா (17), ரத்னகுமாரி (16) மற்றும் பவித்ரா (16) ஆகியோர் சமீபத்தில் தங்களது பள்ளித் தேர்வுகளை முடித்துவிட்டு தோழி அஞ்சலியுடன் அனந்தகிரியில் உள்ள நீர்வீழ்ச்சியைக்கு நேற்று சென்றிருந்தனர்.

அவர்கள் நால்வரும், நீர்வீழ்ச்சியின் ஓரத்தில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தபோது, ​​அவர்கள் எதிர்பாராதவிதமாக வழுக்கி தண்ணீரில் விழுந்தனர்.

இந்த விபத்தில் திரிஷா, ரத்னகுமாரி மற்றும் பவித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த அஞ்சலியை அப்பகுதி மக்கள் கவனித்து லுங்கபர்த்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com