இந்தியாவின் ஆன்மா சமஸ்கிருதம் தான்.. நாட்டின் வாழ்க்கை முறைக்கு மூல ஆதாரம் - ஆர்எஸ்எஸ் தலைவர்

சமஸ்கிருதமே இந்த நாட்டின் சிந்தனை முறைக்கும் வாழ்க்கை முறைக்கும் மூல ஆதாரம்.
இந்தியாவின் ஆன்மா சமஸ்கிருதம் தான்.. நாட்டின் வாழ்க்கை முறைக்கு மூல ஆதாரம் - ஆர்எஸ்எஸ் தலைவர்
Published on

சமஸ்கிருதம் இந்தியாவின் ஆன்மா போன்றது என்றும், நாட்டின் கலாச்சாரம் மற்றும் நாகரிகம் தொடர்வதற்கு அது இன்றியமையாதது என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

இன்று டெல்லியில் சமஸ்கிருத பாரதி அலுவலகத்தின் தொடக்க விழாவில் பேசிய அவர், "இந்தியா என்பது வெறும் புவியியல் அல்லது அரசியல் அமைப்பு மட்டுமல்ல. அது ஒரு உயிருள்ள பாரம்பரியம்.

சமஸ்கிருதமே இந்த நாட்டின் சிந்தனை முறைக்கும் வாழ்க்கை முறைக்கும் மூல ஆதாரம். அதனால்தான் சமஸ்கிருதம் வெறும் மொழி மட்டுமல்ல, அது இந்த நாட்டின் ஆன்மா.

பள்ளிகளில் மந்திரங்கள் ஓதப்பட்டதால், சிறு வயதில் சமஸ்கிருதம் கடினமாகத் தோன்றியது. ஆனால், அதே மொழி வீட்டில் இயல்பாகப் பேசப்பட்டபோது அது எளிதாக இருந்தது.

எந்தவொரு மொழியையும் கற்றுக்கொள்வதற்கான எளிதான மற்றும் சிறந்த வழி புத்தகங்கள் அல்ல, தொடர்ச்சியான உரையாடல்தான்" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com