பீகார் முதலமைச்சராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்பு!

பீகார் மாநில ஆளுநர் சாம்ராட் சவுத்ரிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பீகார் முதலமைச்சராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்பு!
Published on

மாநிலங்களவை உறுப்பினராக பீகாரின் நிதிஷ்குமார் சில தினங்களுக்கு முன் பதவியேற்றார்.

இதற்கிடையே, நேற்று பிற்பகல் ஆளுநர் மாளிகைக்கு வந்த நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பான கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்.

பின்னர், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பாட்னாவில் நேற்று நடைபெற்ற நிலையில், துணை முதல் அமைச்சராக இருந்த சாம்ராட் சவுத்ரி சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, பீகார் முதல் அமைச்சராக சாம்ராட் சவுத்ரி விரைவில் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி பதவி ஏற்றுக் கொண்டார்.

பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாம்ராட் சவுத்ரிக்கு பீகார் மாநில ஆளுநர் சாம்ராட் சவுத்ரிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பீகார் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்க்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com