

மாநிலங்களவை உறுப்பினராக பீகாரின் நிதிஷ்குமார் சில தினங்களுக்கு முன் பதவியேற்றார். இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகைக்கு வந்த நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பான கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்.
இதற்கிடையே, பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில் துணை முதல் மந்திரியாக இருந்த சாம்ராட் சவுத்ரி சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பீகார் முதல் மந்திரியாக சாம்ராட் சவுத்ரி நாளை பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பீகார் ஆளுநரைச் சந்தித்த சாம்ராட் சவுத்ரி தன்னை ஆதரிப்பவர்களின் பட்டியலை அளித்தார். இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
பீகாரில் முதல் முறையாக பா.ஜ.க. சார்பில் முதல் மந்திரி பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.