BRICS ஆலோசனை கூட்டம்: இந்தியா வந்தடைந்தார் ரஷிய வெளியுறவு மந்திரி

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பிற இந்திய அதிகாரிகளை சந்தித்துப் பேச உள்ளார்.
BRICS ஆலோசனை கூட்டம்: இந்தியா வந்தடைந்தார் ரஷிய வெளியுறவு மந்திரி
Published on

நடப்பு ஆண்டிற்கான பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது. 2006-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்காவுடன் வேறு சில நாடுகளும் உறுப்பினர் அந்தஸ்து பெற்றுள்ளன.

பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நாளை மற்றும் நாளை மறுதினம் டெல்லியில் நடைபெறுகிறது.

இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகளின் மந்திரிகள் மட்டத்திலான கூட்டத்தில் பங்கேற்பதற்காக ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் இன்று இந்தியா வந்தடைந்தார்.

இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக மத்திய வெளிவிவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பிற இந்திய அதிகாரிகளை லாவ்ரோவ் சந்தித்து பேச உள்ளார்.

ஏற்கனவே ஈரான் வெளியுறவு மந்திரியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com