வர்த்தகம் தொடக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி, இந்திய பண மதிப்பு சரிவு

வார தொடக்க நாளான இன்று வர்த்தகம் முதலீட்டாளர்களுக்கு பாதகமாக வகையில் தொடங்கியது.
வர்த்தகம் தொடக்கத்தில் சென்செக்ஸ், நிஃப்டி, இந்திய பண மதிப்பு சரிவு
Published on

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலகளாவிய ஸ்திரதன்மையற்ற நிலை, சர்வதேச நிலையில் வலுவாக இருக்கும் டாலரின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ஆகியவை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன.

பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 833.20 புள்ளிகள் சரிந்து 74,404.79 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. நிஃப்டி 234 புள்ளிகள் சரிந்து 23,401.70 புள்ளிகளில் வர்த்தகமானது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், இன்று காலை சந்தை தொடங்கியதும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 96.19 ரூபாயக இருந்தது. பின்னர் அது 96.25 ரூபாயாக சரிவை சந்தித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 95.81 ரூபாயாக இருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com