வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.10 கோடி வரவு.. பார்த்ததும் பெண் செய்த காரியம் - குவியும் பாராட்டு!

சந்தேகம் அடைந்த அவர், மற்றொரு ஏடிஎம்-மிலும் சரிபார்த்துள்ளார். அங்கும் அதே தொகை காட்டியுள்ளது.
வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.10 கோடி வரவு.. பார்த்ததும் பெண் செய்த காரியம் - குவியும் பாராட்டு!
Published on

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது வங்கித் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ. 10 கோடி பணத்தை நேர்மையுடன் திரும்ப ஒப்படைத்த பாராட்டுகளை குவித்து வருகிறது.

மைன்புரி மாவட்டம், தேவ்கஞ்ச் கிராமத்தை சேர்ந்த ரீதா, எளிய விவசாயியான தனது கணவருடன் வசித்து வருகிறார்.

அண்மையில் தனது வங்கித் கணக்கின் இருப்பைச் சரிபார்க்க ஏடிஎம் சென்றுள்ளார். கணக்கில் ரூ. 9,99,49,588 (சுமார் 10 கோடி ரூபாய்) இருப்பு இருப்பதாகக் காட்டியது.

சந்தேகம் அடைந்த அவர், மற்றொரு ஏடிஎம்-மிலும் சரிபார்த்துள்ளார். அங்கும் அதே தொகை காட்டியுள்ளது.

அன்று வங்கி விடுமுறை என்பதால் ரீதாவால் அதிகாரிகளை உடனே தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் வங்கியில் அவர் தகவல் தெரிவித்த நிலையில் இது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடந்திருக்கலாம் என்றும் இது சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி, இத்தனை கோடிகள் கண்ணில் பட்ட பிறகும் நேர்மையாக இருந்தது கிராம மக்களையும் நெட்டிசன்களையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com