ரேணுகாசுவாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜூலை 4-ந்தேதி வரை நீதிமன்ற காவல்

நடிகையும், தோழியுமான பவித்ரா கவுடாவுக்கு அருவறுக்கத்தக்க வகையிலான மெசேஜ்.கட்டையால் கொடூரமாக தாக்கப்பட்டு உடலை மறைவான இடத்தில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது.
ரேணுகாசுவாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜூலை 4-ந்தேதி வரை நீதிமன்ற காவல்
Published on

பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா. நடிகையான பவித்ரா கவுடா இவருக்கு தோழியாவார். இவருக்கு தர்ஷனின் ரசிகரான ரேணுகாசுவாமி அருவெறுப்பான வகையில் மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ரேணுகாசுவாமியை திட்டமிட்டு தர்ஷன் கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தர்ஷன் மற்றும் மேலும் பலரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக சிறப்பு பொது வழக்கறிஞரான (SPP) பிரசன்னா குமார் தர்ஷன் தொடர்பான வழக்கின் அப்டேட்டை தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் தர்ஷன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீஸ் தரப்பில் காவலில் எடுக்க வேண்டுகோள் வைக்கவில்லை. இதனால் தர்ஷன் உள்பட பிரதோஷ், வினய், தன்ராஜ் ஆகிய நான்கு பேரை பரப்பன அக்ராஹர மத்திய சிறையில் ஜூலை 4-ந்தேதி வரை அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 4-ந்தேதி நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. அதுவரை சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தர்ஷன் கடந்த 11-ந்தேதி 33 வயதான ரேனுகாசுவாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். தர்ஷன் 30 லட்சம் ரூபாய் கொடுத்து ரேனுகாசுவாமியை கொலை செய்து, அவரது உடலை அப்புறப்படுத்தவும், ஆதாரங்களை அழிக்கவும் சொன்னதாக கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சில குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ரேணுகாசுவாமி மரக்கட்டைகளால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக உடல்பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் இதுவரை 17 பேரை கைது செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com