திருப்பதி அருகே சாமி சிலையில் இருந்து சிவப்பு நிற திரவம் வடியும் அதிசயம்- ரத்தம் போல் இருந்ததால் பக்தர்கள் அச்சம்

கோவில் கருவறையில் உள்ள சாமி சிலையின் பாதத்தில் இருந்து ரத்தத்தை போல் சிவப்பு நிற திரவம் வடிந்தது. சாமி கல் சிலையில் இருந்து இது போன்ற திரவங்கள் வெளியேறுவது அரிதானது என கூறப்படுகிறது.
திருப்பதி அருகே சாமி சிலையில் இருந்து சிவப்பு நிற திரவம் வடியும் அதிசயம்- ரத்தம் போல் இருந்ததால் பக்தர்கள் அச்சம்
Published on

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சித்வேலு அடுத்த நாகவரம் கிராமத்தில் 1228-ம் ஆண்டு காலத்தை சேர்ந்த பழமையான ஸ்ரீ சென்னகேசவ சாமி கோவில் உள்ளது.

இந்த கோவிலில் நேற்று காலை விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்தது. கோவில் கருவறையில் உள்ள சாமி சிலையின் பாதத்தில் இருந்து ரத்தத்தை போல் சிவப்பு நிற திரவம் வடிந்தது. சாமி கல் சிலையில் இருந்து இது போன்ற திரவங்கள் வெளியேறுவது அரிதானது என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து சுற்றுவட்டார பகுதி மக்களிடம் வேகமாக தகவல் பரவியது. ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். சாமி பாதத்தில் இருந்து சிவப்பு நிற திரவம் வெளியேறுவதை ஆச்சரியத்துடன் கண்டனர். பிரம்மனின் ஞானத்தின்படி கலியுகத்தின் முடிவுக்கு முன் சாமி சிலைகள் கண்ணீர் வடிப்பதும், ரத்தம் வடிவதும் சில அறிகுறிகள் என ஆன்மீக வாதிகள் கூறியுள்ளனர்.

அவர்கள் கூறியதை போல் சாமி சிலைகளில் இருந்து ரத்தம் வடியும் சம்பவம் ஆந்திர மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com