தேர்தல் ஆணையர் Gyanesh Kumar பதவிநீக்கம் கோரி நோட்டீஸ்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு

193 எம்.பி.க்கள் நோட்டீசில் கையெழுத்திட்டுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
சி.பி.ராதாகிருஷ்ணன், ஓம் பிர்லா
சி.பி.ராதாகிருஷ்ணன், ஓம் பிர்லா
Published on

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவிநீக்கம் செய்யக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

தலைமைத் தேர்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரும் தீர்மானத்தில் குறைந்தபட்சம் மக்களவையில் 100 எம்.பி.க்கள் கையெழுத்திட வேண்டும், மாநிலங்களவையில் 50 எம்.பி.க்கள் கையெழுத்திட வேண்டும்.

இதற்கிடையே, அந்த நோட்டீசில் 130 மக்களவை எம்.பி.க்களும், 63 மாநிலங்களவை எம்.பி.க்களும் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர். கூட்டணியில் இல்லாத ஆம் ஆத்மி கட்சி மற்றும் சில சுயேச்சை எம்.பி.க்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நோட்டீசில் ஆளும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாகச் செயல்படுதல், தேர்தல் மோசடி, எஸ்ஐஆர் முறைகேடு போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்திய வரலாற்றிலேயே தலைமைத் தேர்தல் ஆணையர் ஒருவரை பதவிநீக்கம் செய்யக்கோரி நோட்டீஸ் அளிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவிநீக்கம் செய்யக் கோரும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் நோட்டீசை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவை சபாநாயகர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நிராகரித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com