40,000 ஆபாச வீடியோக்கள்... இந்து பெண்களை குறிவைத்து ஆடியோக்கள் மூலம் உத்தரவு?

'பாகிஸ்தான் தொடர்பு' என பஜ்ரங் தளம் குற்றச்சாட்டு; ஆதாரங்கள் இல்லை என காவல்துறை விளக்கம்!
Manish Sharma - Moin Khan
Published on

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பஜ்ரங் தளம் அமைப்பினர் அளித்த புகாரின் பேரில், மனிஷ் சர்மா என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தற்போது தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஜ்ரங் தளம் அமைப்பின் குற்றச்சாட்டுகள்..

பஜ்ரங் தளம் அமைப்பின் நிர்வாகி யோகேஷ் ரென்வால் கோட்டாவில் உள்ள விஞ்ஞான் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மனிஷ் சர்மா என்ற நபர் தனது பெயரை 'மொயீன் கான்' என மாற்றிக்கொண்டு, டெலிகிராம், ஸ்னாப்சாட், டிஸ்கார்ட் போன்ற செயலிகளில் தீவிரமாக இயங்கியுள்ளார்.

இவரது மொபைல் போனில் இந்து பெண்களின் 40,000-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

சில வீடியோக்களில் பெண்களின் உடலில் 'ஓம்' மற்றும் 'சுவஸ்திக்' சின்னங்கள் இருந்ததாகவும், இந்து கடவுள்கள் அவமதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

'கஸ்வா-ஏ-ஹிந்த்' மற்றும் 'ஜிஹாத்-அல்-அக்பர்' போன்ற டெலிகிராம் குழுக்கள் மூலம் பாகிஸ்தானில் உள்ள நபர்களுடன் தொடர்பு கொண்டு, இந்து பெண்களைக் குறிவைக்க ஆடியோக்கள் மூலம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக பஜ்ரங் தளம் புகார் கூறியுள்ளது.

காவல் துறையின் அதிகாரபூர்வ விளக்கம்..

இந்த விவகாரம் குறித்து கோட்டா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுபாஷ் மிஷ்ரா மற்றும் விசாரணை அதிகாரி மங்கிலால் ஆகியோர் இதுவரை நடந்ததை விளக்கமளித்துள்ளனர்.

மனிஷ் சர்மா மதமாற்றம் செய்ததற்கோ அல்லது இந்து கடவுள்களை அவமதித்ததற்கோ இதுவரை எந்த உண்மையான ஆதாரமும் கிடைக்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்ட நபர் டெலிகிராம் குழுக்களில் இணைந்து ஆபாச வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்து தனது மொபைலில் சேமித்து வைத்துள்ளார் என்பது மட்டும் தற்போதைய விசாரணையில் உறுதியாகியுள்ளது.

ஆடியோ கிளிப்புகள் மூலமாக பாகிஸ்தான் தொடர்பு இருப்பதாக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.

மேலும் ஷர்மா விருத்தசேதனம் செய்துகொண்டாரா என்பதை புலனாய்வாளர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளனர்.

தற்போது மனிஷ் சர்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மொபைல் தரவுகள் மற்றும் சமூக ஊடக கணக்குகளைக் கொண்டு காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com